திங்கள், 3 நவம்பர், 2014

பதிவுகள்.

பதிவுகள்.

எல்லாவற்றையுமே
ஞாபகத்தில் பதிந்தாகி விட்டது.
ஒவ்வொரு கணமும்
தெளிவாக
மூளையின் ஒவ்வொரு பகுதியில்.
மனதில் துடிப்பு
ஒவ்வொரு கணத்தையும்
மீண்டும் வாழ –
உறைந்த ஞாபகங்கள்
மீண்டும் உயிர் பெற –
எதிர் காலமும்
கடந்த காலமாகவே மாற –
எனினும்
எதுவும் செய்யாது
நினைத்துக் கொண்டும்
கனவுகளில் குளித்துக் கொண்டும்
எப்போதும்
நம்பிக்கையோடு
மனிதர்கள் .


 [ வலைப்பதிவிற்கு பின்  மலைகள் இணைய இதழ்  - 64 – டிசம்பர் 17 , 2014  இதழிலும் பிரசுரமாகியுள்ளது ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக