கவிச்சூரியன் மின் இதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிச்சூரியன் மின் இதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 ஜனவரி, 2015

கவிச்சூரியன் ஐக்கூ மின்னிதழ் – 32 ல் வெளியான ஐக்கூ கவிதைகள் .


கவிச்சூரியன் ஐக்கூ மின்னிதழ்  – 32  ல் வெளியான ஐக்கூ கவிதைகள் .

வான்கோ தோட்டத்து மலர்கள்
வர்ணமிழந்தன
தூரிகைக்கு தானம் கொடுத்து .

மழை அழித்தது
தெருவோர ஓவியத்தை
வரைந்தவனின் அன்றைய தினத்தையும் .

குடையைப் பழுது பார்ப்பவர்
விரிக்காத குடைகளுடன்
நனைகிறார் வெயிலில் .

பூச்சிகளின் ஆயுளை
நிர்ணயிக்கின்றது
பல்லி நாக்கின் நீளம் .

போட்டி போட்டன
கடை பொம்மைகள்
பேத்திக்கு பரிசாவதற்கு .

[ கவிச்சூரியன் ஐக்கூ மின்னிதழ்  32   ]


வெள்ளி, 19 டிசம்பர், 2014

[ கவிச்சூரியன் ஐக்கூ மின்னிதழ் 30 – டிசம்பர் 16 – 31 ] இதழில் எனது லிமரைக்கூ கவிதைகள்


இனிஒரு விதி செய்வோம்
விளை நிலத்தை விற்க மாட்டோம்
எப்பாடாயினும் பயிர் செய்வோம் .


மார்கழி மாதம் குளிர்காலம்
மனதில் நிறைந்த இசையாய் மணக்கிறது
வெம்பாவை ஆண்டாள் திருக்கோலம் .
  

மானிடரை உய்விக்க உதித்தார்
அன்பை மாநிலத்தில் வளர்க்க பாடுபட்டு
மிருகங்களால் சிலுவையில் மரித்தார் .

[ கவிச்சூரியன் ஐக்கூ மின்னிதழ் 30 – டிசம்பர் 16 – 31 ] 


வியாழன், 4 டிசம்பர், 2014

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 29 [ டிசம்பர் 1 - 15 , 2014 ] இதழில் வெளிவந்த என் லிமரைக்கூ கவிதைகள் :


கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 29 [ டிசம்பர் 1 - 15 , 2014 ] இதழில் 

வெளிவந்த என் லிமரைக்கூ கவிதைகள் :



எய்ட்ஸ் தினம்

இளமையை விரும்பும் யயாதி
இறந்தால் வராது உன் வாழ்க்கை
உணர்ந்தால் இல்லையே வியாதி .

கப்பற்படை தினம்

கடல் வழியே பாதுகாப்பு
கடல் சூழ்ந்த நம் நாட்டை
காக்கும் நல்ல கட்டுக்கோப்பு .

கார்த்திகை தீபம்

வெளிச்சமாய் தீபங்கள் வீடெங்கும்
வருடம் தோறும் வரும் கார்த்திகை
வளமாய் அமையட்டும் நாடெங்கும் .

[ கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 29  டிசம்பர் 1 - 15 , 2014 ]


செவ்வாய், 25 நவம்பர், 2014

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 28 [ நவம்பர் 16 - 30 , 2014 ] - இதழில் வெளிவந்த எனது ஹைக்கூ கவிதைகள் .



கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 28 [ நவம்பர் 16 - 30 , 2014 ] - இதழில் 

வெளிவந்த எனது ஹைக்கூ கவிதைகள் .

தேசீய ஒருமைப் பாட்டு தினம்

மொழி வேறுதான்
இனம் வேறுதான்
மனம் ஒன்றுதானே ?

இனத்தை மறந்து விடு
மொழியைத் துறந்து விடு
உணர்வால் ஒன்று படு .

உயிரற்ற சாலைகள் கூட
இணைந்தேயிருக்கின்றன
மனிதர்களுக்குப் பாடமாய் .

கலைவாணர் பிறந்த தினம் .

கலைவானில் பறந்தார்
கருணையால் உயர்ந்தார்
மனதில் நிற்கிறார் என்.எஸ்.கே .

மறைந்தார் கலைவாணர்
மறையாத சிந்தனைகளால்
நிலைத்து நிற்கிறார் .

மாட்சுவோ பாஷோ நினைவு தினம் .

மூவடி படிமங்கள்
வெளிச்சமாய் இன்றும்

பாஷோ ஏற்றிய தீபங்கள் .

ஞாயிறு, 16 நவம்பர், 2014

உலக சைவ உணவாளர்கள் தினம் .கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ்

உலக சைவ உணவாளர்கள் தினம் .


உண்பது உயிர் வாழ
உண்போம் சைவம்

இன்னொரு உயிரும் வாழ .

இருப்பது ஆறறிவு
பசிதீர மட்டும்
ஐந்தறிவா ?

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 27 [ நவம்பர் 1 - 15 , 2014 ]

வியாழன், 13 நவம்பர், 2014

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 27 [ நவம்பர் 1 - 15 , 2014 ]

வளர்ப்போம்
வியத்தகு நகரங்களை

கூடவே மானுடத்தையும் .

நகரங்கள் விரிகின்றன
சுருங்குகிறது
மனித மனம் .

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 27 [ நவம்பர் 1 - 15 , 2014 ]

செவ்வாய், 11 நவம்பர், 2014

இந்திய குழந்தைகள் தினம் . ஹைக்கூ .

இந்திய குழந்தைகள் தினம்

இலவசம்
உணவல்ல கல்வி

குழந்தையின் ஏக்கம் .


ஒவ்வொரு குச்சியிலும்
எரிகின்றது
ஒரு குழந்தையின் எதிர்காலம் .

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 27 [ நவம்பர் 1 - 15 , 2014 ]

சனி, 25 அக்டோபர், 2014

கவிச்சூரியனில் கவிதை மூன்று

காலனுக்கும் ஆசை
கவியரசரின்
கவிதை கேட்க .

உலகில் உள்ளோர்
அனைவருக்கும் உணவு
அதுவே நம் கனவு .

வாழ்க்கையிலும் தேவை
வார்த்தைகளிலும் தேவை

சிக்கனம் .



கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 26 [ அக்டோபர் 16 - 31 , 2014 ]

திங்கள், 29 செப்டம்பர், 2014



[ கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் செப்டம்பர் 16 – 30 / 2014  ]