வியாழன், 24 செப்டம்பர், 2015
உணர்வுகளும் உணர்வுகளும் .
மேகங்களின் அழுகை .
மீட்கப் பட்ட ஏதேன் தோட்டக் கனி .
மீட்கப் பட்ட
ஏதேன் தோட்டக் கனி .
இரக்கம் வந்தது
மனிதன் மீது.
இறங்கி வந்தார்
கடவுள் தரைக்கு...
மூட்டையாக்கிச்
சுமந்து சென்றார்
மனித பாவங்களை தலை
மீது ...
இளைப்பாற நினைத்து
இறக்கி வைத்து
இமைகள் செருகி
தூங்கி எழ
மூட்டையில்லை ...
வைத்த இடத்தில் .
”” பாவமே இல்லாமல்
வாழ்வது எப்படி ? “
தூரத்தே நின்று
மனிதன் கேட்டான்
மூட்டையைப்
பிரித்தவாறு ... !
[ பாக்யா பிப்ரவரி 13
– 15 ; 2015 ]
நம்பிக்கை .
நம்பிக்கை .
456
எட்டாவது குறுக்குத் தெரு
குறிஞ்சி நகர்...
பலமுறை போய் வந்த முகவரிதான் .
வேகாத வெயிலில்
அலைந்து திரிகிறேன் .
திசைகள் மாறாவிடினும்
வீடு வந்து சேர வில்லை இன்னும் .
கேட்கப்படும் ஒவ்வொருவரிடமிருந்தும்
வெளிப்படுகின்றன
வெவ்வேறு விதமான வழிகாட்டுதல்கள் .
பசி மறந்து நடக்கின்றேன்
வழி தவறி விடக்கூடாதேயென்ற
பதட்டத்துடன் .
தெரிந்த அடையாளங்கள்
தேய்ந்து போயிருந்தன .
காலத்தின் ஓட்டத்தில்
நகரம் மாறித்தான் இருக்கிறது .
கதவிலக்கம் மாறியிருக்கலாம் ;
தெருப் பெயரும் மாறியிருக்கலாம் ;
குறிஞ்சி நகர் கூட வேறொரு
நகராக மாறியிருக்கலாம் .
தளராது நடக்கிறேன்
நண்பன் மாறியிருக்க மாட்டான்
நட்பும் மாறியிருக்காதென்ற
அசைக்க முடியா நம்பிக்கையோடு .
[ கணையாழி பிப்ரவரி 2015 ]
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






