செம்பருத்தி
எனக்கு
பிடித்த மலர்
எதுவென்று
வெகுநாளாய்
எனக்குத் தெரியாது .
மணங்களையும்
நிறங்களையும்
இனம்
பிரிக்க இயலாமல்
நேற்று
வரை
மலர்களை
வகை பிரித்து
நேசித்ததில்லை
.
எனினும்
இன்று
காய்ந்து
, மகரந்தம் சிதறி ,
நிறம்
மாறி ,
புத்தகங்களின்
இருபக்கங்களிடையே
அடைபட்ட
ஒரு
செம்பருத்தி
கிரணங்களாய்
விரியும்
சிதறல்களை
வீசி
எதையோ
என்னுள்
துளிர்க்க வைக்கிறது .
துளிர்ப்பது
உன்
நட்பென்று புரிகின்றது .
[ புதுப்புனல்
பிப்ரவரி 2014 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக