அருவி இதழ் 20 ஹைக்கூ சிறப்பிதழில் வெளியானவை .
நிறைய
பொம்மைகள்
நிறைய
தின்பண்டங்கள்
நிற்பது
அம்மாவின் முத்தம்தான் .
எப்போதும்
படபடப்பு
சன்னலருகில்
வண்ணத்துப்பூச்சி
.
தொலைவில் இடி
பார்வையில்
மின்னல்
காலடியில் ஈரம்
.
காற்று
இருக்கிறது
தூற்றிக்
கொண்டிருக்கிறார்கள்
அடுத்தவர்கள்
தானியத்தை .
வழியெங்கும்
பூக்கள்
விதவையின்
இறுதி ஊர்வலம்
.
நிலம் கரைந்து
பகை மறந்து
விட்டது
வழக்கு
முடியவில்லை .
[ அருவி இதழ்
20 ஜனவரி – மார்ச் 2014 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக