காதல் வாசம் – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – ஓமலூர் பாலு .
ஓவியா பதிப்பகம் ,
வத்தலக்குண்டு .
84 பக்கங்களிலும் காதல் ... காதல் ...
காதல் ... ஆசிரியரின் வார்த்தைகளில் சொன்னால் இந்த கவிதைத் தொகுப்பு ” வாழ்வின் விளிம்பு வரையும் காதலித்துக்
கொண்டிருப்பவர்களுக்கு . “ ஆனால் முழுமையாகப் படித்து முடிக்கும் போது , ஆணுக்கும்
பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதலை மட்டுமே இவரது கவிதை வரிகள் உணர்த்தவில்லை
என்றே எண்ணத் தோன்றுகிறது . பெண் மீது உருவாகும் காதலை மேற்பரப்பில் தெரிய வைத்து
உள்ளுக்குள் இயற்கை , சமூகம் என எல்லாவற்றின் மீதும் ஏற்படும் காதலை புதைய
வைத்துள்ளார் என்றே படுகிறது .
உன் வீட்டின் /
சாதியெனும் தக்கையை வைத்து / நம் காதல் கப்பலை / கவிழ்க்க முடியுமா சொல் ... ?
உன் / நெற்றி
பார்த்த / முழுநிலவு முடிவெடுத்தது / இன்று முதல் / பிறையாக மாற ...
உன் புருவங்கள்
பார்த்து / ஏக்கம் கொண்டது / மழைக்கால – தற்காலிக / வானவில் ...
என்று ஒவ்வொரு
வரியிலும் இயற்கையை மறக்காமலே இருக்கின்றார் கவிஞர் .
அடுத்த தொகுப்பில்
தம் பார்வையை முழுவதுமாக சமூகம் பக்கமாக திருப்ப விரும்புவதாக கூறியுள்ளார் தன்
உரையில் .
வரவேற்போம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக