![]() |
தொலைந்து போன கேள்விகள் .
தெரியாமல்தான்
கேட்க வேண்டியதிருக்கிறது
நிறைய கேள்விகளை .
தெரிந்தும்
கேட்க வேண்டியதிருக்கிறது
சில கேள்விகளை சில சமயங்களில் .
கேட்கப் படும் கேள்விகளுக்குத்தான்
பதில்கள் அளிக்கப் படுகின்றன .
சில சமயங்களில்
கேட்கப்படாத கேள்விகளுக்கும்
பதில்கள் அளிக்கவே நேர்கின்றன .
எனினும்
பல நேரங்களில்
தெரிந்த பதில்களையும்
அளிக்க முடியாமல்
சில கேள்விகள்
தொலைந்துதான் போகின்றன .
[ புதுப்புனல் ஆகஸ்ட்
2014 ]
[ நந்தலாலா இணைய இதழ் –
019 ஆகஸ்ட் – 2014 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக