அருவி / அக்டோபர் – டிசம்பர் 2013 / ஆண்டு மலரில் வெளியான ஹைக்கூ கவிதைகள் .
கல்
எறியப்பட்டது
காய்ந்த
குளத்தில்
இரையானது
தவளை .
வானத்தில்
மீன்கள்
குளத்தில்
நட்சத்திரங்கள்
இடமாற்றம்
மனதில் .
கழிந்து
போன கணங்கள்
அத்தனையும்
காகிதங்களோடு
தான் .
ஐந்தோடு
முடிந்தது
கண்களில்
நட்சத்திரம்
மூச்செங்கும்
கந்தகம் .
ஏறுவது
கடினம்
இறங்குவது
சுலபம்
நின்றது
அடிவாரத்தில் .
[
அருவி / அக்டோபர் – டிசம்பர் 2013 / ஆண்டு மலர் ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக