இயற்பெயர் : வே . சுப்ரமணியன் . நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன் . தற்சமயம் வசிப்பது திருநெல்வேலியில் . தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பொறியாளனாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளவன் . படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவன் .
படிப்பதில் இருந்த ஆர்வம் எழுதத் தூண்டியதால் எழுதத் துவங்கியவன் . எழுதுவதைப்
பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தோடு பத்திரிகைகளுக்கு அனுப்பியவன் . சில பிரசுரமும்
ஆகியுள்ளன .
முதல் சிறுகதை 1979ல் குமுதம் நடத்திய இளைய
தலைமுறையினருக்கான சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்று பிரசுரம் ஆயிற்று
. [ ஒரு மாலை நேரத்தில் என் மனம் அழுகின்றது . ]
அக்டோபர் 1993ல் சுபமங்களாவில் வெளி வந்த ’ குடை ’
சிறுகதை அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக இலக்கிய சிந்தனை அமைப்பால்
தேர்ந்தெடுக்கப் பட்டது . [ தேர்ந்தெடுத்தவர் – எஸ் . ராமகிருஷ்ணன் . ]
பிரசுரமான முதல் கவிதை – வட்டாலமரம் .
கணையாழி ஜனவரி 1994 இதழில் வெளிவந்தது .
இடையில் ஏற்பட்ட தொய்விற்குப் பின்
மீண்டும் எழுதும் ஆர்வம் உருவாகி இருப்பதால் எழுத ஆரம்பித்துள்ளேன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக