இன்றைய தினம்
வலி
எடுத்தும்
நடம்
புரியும் நடராஜ தவம் .
தூக்கிய
பாதம் இடறி
விழுந்த
இரவு
தூங்காமலே
பின்னர் கழிந்து போனது .
விழிகள்
மூடிய காலை நேரத்தில்
ஆதித்யன்
கோபம் மனசை உரசியது .
விழித்துக்
கொண்டும்
தூக்கம்
கலையாத நேற்றைய மனம்
இன்று
புதிதாய் துவங்கிய நாட்டியம் .
ஒவ்வொரு
தினமும் வேடங்கள் புதிது .
வேர்கள்
மட்டும் மாறவே இல்லை .
வேர்களின்
துணையால்
துளிர்த்த
இலைகள்
நேசம்
வைத்ததென்னவோ
மின்னும்
நட்சத்திரங்கள் மீதுதான் .
மீந்தவை
கணக்குப் பார்க்கையில்
உடைந்த
துண்டுகள் மட்டுமே
இருப்பில்
.
[
சுபமங்களா செப்டம்பர் 1995 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக