பார்வையை
இழக்கும்போது
சப்தங்களைக்
காதலிக்கக்
கற்றுக்
கொள்கிறோம் .
செவி
தன் தன்மை இழக்கும்போது
அமைதியை
நேசிக்கக்
கற்றுக்
கொள்கிறோம் .
பேசும்
திறன் இழக்கும்போது
மெளனத்தை
அணைத்துக் கொள்ளக்
கற்றுக்
கொள்கிறோம் .
வயிறு
தன் இயல்பை இழக்கும்போது
பசியைப்
பொறுக்கக்
கற்றுக்
கொள்கிறோம் .
மனம்
மரத்துப் போகும் போதுதான்
செய்வதறியாது
திகைத்துப்
போகிறோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக