அவர்களும்
இவர்களும் ...
அவர்கள்
அப்படி இருக்கிறார்கள்
அவர்கள்
இப்படி இருக்கிறார்கள்
அவர்கள்
அதைச் செய்தார்கள்
அவர்கள்
இதைச் செய்தார்கள்
அவர்கள்
அதை வாங்கினார்கள்
அவர்கள்
இதை வாங்கினார்கள்
அவர்கள்
அப்படிச் சொன்னார்கள்
அவர்கள்
இப்படிச் சொன்னார்கள்
அவர்கள்
அது வைத்திருக்கிறார்கள்
அவர்கள்
இது வைத்திருக்கிறார்கள்
இப்படி
அவர்களைப்
பற்றியே
பேசிக்
கொண்டும்
நினைத்துக்
கொண்டும் இருப்பதினால்
வாழாமலே
கழிந்து விடுகிறது
சிலரது
வாழ்க்கை .
[
காக்கைச் சிறகினிலே மார்ச் 2015 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக