உருமாற்றம் .
எந்தக் கணத்தில்
பறவையாக மாறினேன் நானென
புலப்படவில்லை இதுவரையெனக்கு .
முதலில் சிறகுகள் முளைத்ததாகத்தான்
ஞாபகம்
அல்லது அலகுகளாகக் கூட
இருக்கலாம் .
ஏதோவொன்று
எதுவென்று
தெளிவாயில்லை நினைவுகளில் .
எனினும்
பறவையாக மாறி விட்டேனென்று
உறுதிப் படுத்தியது
நானமர்ந்திருந்த மரக்கிளயின்
இலைகளிலொன்றின் உரசல் .
சிறகுகள் உதிர்ந்தும்
அலகுகள் சிதைந்தும் போய்
எல்லாம் முடிந்தும்
மனம் மட்டும் பறந்து
கொண்டேயிருக்கிறது
உருமாற்றத்திற்கு வழியில்லாமலும்
தரையிறங்கத்
தெரியாததாலும் .
[
தளம் ஜூலை – செப்டம்பர் 2015 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக