மீட்கப் பட்ட ஏதேன்
தோட்டக் கனி .
இறக்கம் வந்தது
மனிதன் மீது.
இறங்கி வந்தார்
கடவுள் தரைக்கு.
மூட்டையாக்கிச்
சுமந்து சென்றார்
மனித பாவங்களை
தலை மீது .
இளைப்பாற நினைத்து
இறக்கி வைத்து
இமைகள் செருகி
தூங்கி எழ ,
மூட்டையில்லை
வைத்த இடத்தில் .
” பாவமே இல்லாமல்
வாழ்வது எப்படி ? “
தூரத்தே நின்று
மனிதன் கேட்டான்
மூட்டையைப்
பிரித்தவாறு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக