பதிவுகள்.
எல்லாவற்றையுமே
ஞாபகத்தில் பதிந்தாகி
விட்டது.
ஒவ்வொரு கணமும்
தெளிவாக
மூளையின் ஒவ்வொரு
பகுதியில்.
மனதில் துடிப்பு
ஒவ்வொரு கணத்தையும்
மீண்டும் வாழ –
உறைந்த ஞாபகங்கள்
மீண்டும் உயிர் பெற –
எதிர் காலமும்
கடந்த காலமாகவே மாற –
எனினும்
எதுவும் செய்யாது
நினைத்துக் கொண்டும்
கனவுகளில் குளித்துக்
கொண்டும்
எப்போதும்
நம்பிக்கையோடு
மனிதர்கள் .
[ வலைப்பதிவிற்கு பின் மலைகள் இணைய இதழ் - 64 – டிசம்பர் 17 , 2014 இதழிலும் பிரசுரமாகியுள்ளது ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக