சும்மா தமாசுக்கு . - சட்டை
அவர் பிரபலமான தேசீயத் தலைவர் . குஜராத்தைச்
சேர்ந்தவர் . தீபாவளிக்கு அவருக்கு பிடித்த ஒரு துணி வாங்கினார் . அந்த துணி
வகையில் அதுதான் கடைசி இருப்பு . தீபாவளி நேர நெருக்கடியில் பின்னால் தைத்துக்
கொள்ளலாம் என்று வைத்து விட்டார் . தீபாவளி முடிந்ததும் அவருடைய ஆஸ்தான
தையற்காரரிடம் சென்றார் . துணியை அளந்து பார்த்துவிட்டு , “ அய்யா , துணி
உங்களுக்குப் பற்றாது” என்று கூறி விட்டார் . தலவருக்கோ வருத்தம் . பிடித்தமான
துணியில் சட்டை தைக்க முடியாமல் போய் விட்டதே என்று . எதற்கும் இருக்கட்டும் என்று
வேறு சில தையற்காரர்களைப் பார்த்தார் . எல்லோரும் அதையேதான் சொன்னார்கள் . ” துணி உங்களுக்குப் பற்றாது .” சில தினங்களுக்குப் பிறகு மும்பைக்குப் போன போது
துணியை கூடவே எடுத்துச் சென்றார் . அங்குள்ள பிரபல தையற்காரர்களும் துணி பற்றாது
என்று சொல்லிவிட தலைவர் மனம் உடைந்து போனார் . அடுத்த வாரம் ஹரியானா பயணம் . அங்கே
உள்ள தையற்காரர்களிடம் இருந்தும் அதே பதில்தான் . தலைவர் சோகமாகி விட்டார் .
மனதிற்குப் பிடித்த துணியில் சட்டை தைத்துப் போட முடிய வில்லையே என்று . எனினும்
மனம் தளரவில்லை . ஒரு மாதம் கழித்து சென்னைக்கு வர வேண்டிய சூழ்நிலை . விடாமல்
துணியையும் எடுத்துச் சென்றார் . சென்னையின் பிரபல தையற்கலைஞரைச் சந்தித்து துணியை
கொடுத்தார் . சென்னை தையற்காரர் அந்தத் துணியில் அழகான சட்டை ஒன்றை தைத்துக்
கொடுத்து விட்டார் . கச்சிதமாகப் பொருந்தியிருந்த அந்த சட்டையைப் பார்த்ததும் தலைவருக்கு
ஒரே ஆச்சரியம் . ” குஜராத்திலும் , மகாராஷ்டிராவிலும் , ஹரியானாவிலும்
பற்றாத துணி இங்கு எப்படி எனக்கு சரியாக இருக்கிறது! “ என வியந்து போனார் . சென்னை தையற்காரர்
அமைதியாகச் சொன்னார் : “ அங்கு எல்லாம் நீங்க பெரிய ஆளாக இருக்கலாம் . ஆனால்
இங்கு அப்படி இல்லை . “
அருமை
பதிலளிநீக்கு