காற்றாடி
விற்பவன் .
பகட்டான
விளக்கொளியில் மின்னும்
துணிக்கடை
வாசலில்
மழையோ
வெயிலோ எப்போதும்
நின்று
கொண்டிருக்கும்
காற்றாடி
விற்பவனை
பார்த்திருக்கலாம்
உங்களில் பலர் .
வெவ்வேறு
வண்ணங்களில்
வித
வித உருவங்களில்
சுழன்று
கொண்டிருக்கும்
காகிதக்
காற்றாடிகளோடு எப்போதும்
ஒற்றைக்
கால் ஊன்றிதான் நிற்பான்
காற்றாடி
விற்பதவனது தவமென்பது போல் .
கண்ணுக்கு
தெரிவது
சுழன்று
கொண்டிருக்கும்
காற்றாடிகள்
மட்டுமே .
அவனுக்குத்
தெரியும்
வாழ்க்கை
சுழல்வதே
காற்றாடிகள்
சுழல்வதாலெனென்று .
எந்த
வெயிலிலும் கரையுமவன்
மழையில்
மட்டும் மறைவில் நிற்பான்
காற்றாடிகள்
நனைந்து விடக் கூடாதென்று .
ஐந்துக்கும்
பத்துக்கும் காற்றாடி விற்று
வாழ்க்கையெப்படி
ஓடுகிறதென
யோசித்திருக்கலாம்
உங்களில் சிலர் .
ஒவ்வொரு
வேளை உணவிலும்
உருவாகும்
காலி இடத்தை
நிறைப்பது
காற்றாடி
வாங்கியதும்
கை
நீட்டி சுழல விட்டு
குதூகலிக்கும்
குழந்தைகளின்
புன்னகைகள்தான் .
எனவேதான்
அவன்
வாழ்க்கையும்
சுழன்று கொண்டிருக்கிறது
கையில்
உள்ள காற்றாடிகளைப் போலவே .
[
புதுப்புனல் அக்டோபர் 2014 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக