மன்னித்து விடு பாரதி .
காற்று இனிது .
என் கூரையை அடித்துச்
செல்லாத வரை .
தீ இனிது .
என் வீட்டை எரிக்காத
வரை .
மழை இனிது .
என் இல்லம் ஒழுகாத
வரை .
மின்னல் இனிது .
என் பார்வையைப்
பறிக்காத வரை .
இடி இனிது .
என் தலையில் இறங்காத
வரை .
கடல் இனிது .
என்னை இழுத்துச்
செல்லாத வரை .
காடு இனிது .
நான் திக்குத்
தெரியாது தவிக்கும் வரை .
எல்லாமே இனிதுதான்
என்னைப் பாதிக்காத
வரையிலும் .
மன்னித்து விடு பாரதி
,
நான் சாதாரண
மனிதன்தான் .
[
புதுப்புனல் அக்டோபர் 2014 ]
மன்னித்து விடு பாரதி ,
பதிலளிநீக்குநான் சாதாரண மனிதன்தான் .
unmaije..
Vetha.Langathilakam.