சும்மா தமாசுக்கு.....கங்காரு கதை .
புதிதாய் பதவி
ஏற்ற ஆஸ்திரேலிய பிரதமருக்கு ஓர் ஆசை வந்தது . உலகில் உள்ள அத்தனை நாட்டு தலைவர்களையும்
அழைத்து ஒரு விருந்து கொடுக்க வேண்டும் . அத்தனை நாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு
அனுப்பினார் . குறிப்பிட்ட நாளில் அத்தனை நாட்டுத் தலைவர்களும் ஆஸ்திரேலியாவில்
குவிந்து விட்டனர் . இதுவரை உலகில் எங்குமே நடந்திராத அளவில் மிகச் சிறந்த
விருந்தாக அமைந்திருந்தது . அத்தனை பேரின் பாராட்டுகளும் ஆஸ்திரேலிய பிரதமரின்
உள்ளத்தை குளிர வைத்துவிட்டது . விருந்தின் முடிவில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார் .
” தங்களது அன்பால் நானும் ஆஸ்திரேலிய மக்களும்
மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம் . உங்கள் அனைவருக்கும் ஒரு பரிசு தர விரும்புகிறேன்
. உங்களது விருப்பத்தை கூறினால் பரிசுகள் இன்னும் சில தின்ங்களில் உங்களுக்கு
அனுப்பி வைக்கப்படும் . நன்றாக யோசித்து தங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள் .
எதுவாக இருந்தாலும் தங்களது பரிசு நிச்சயமாக அளிக்கப்படும் . “ ஒருவர் ஒருவராக
தாங்கள் விரும்பும் பொருளைக் கூறக் கூற பிரதமரின் உதவியாளர் குறித்துக் கொண்டார் .
நம்ம ஆளு [ இந்திய தலைவர் ] ஒவ்வொருவர் ஆசையையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு
வந்தார் . கடைசியாக தன் விருப்பத்தை வெளியிட்டார் . “ எனக்கு இரண்டு கங்காருகள்
வேண்டும் . ஒன்று இருப்பதிலேயே பெரிய பை உடையதாகவும் இன்னொன்று இருப்பதிலேயே
நன்றாக தாவிக் குதிப்பதாகவும் இருக்க வேண்டும் . “ ஆஸ்திரேலிய பிரதமருக்கு ஒரே
ஆச்சரியம் . மற்றவர்கள் எல்லாம் விலை உயர்ந்த பரிசுகளை விரும்பும் போது , இவர்
மட்டும் இங்கு ஏராளமாக கிடைக்கும் கங்காருவைக் கேட்கிறாரே , காந்தி பிறந்த
நாட்டுக்காரர் என்பதனால் மிக எளிமையான பரிசை விரும்புகிறார் போலும் என்று
நினைத்துக் கொண்டார் . என்றாலும் நம்மவர் அருகில் சென்று மிக மெல்லிய குரலில் தன்
சந்தேகத்தைக் கேட்டு விட்டார் . நம்மவரும் மெல்லிய குரலில் பதில் கூறினார் . “ பெரிய பை உள்ள கங்காரு கட்சி தாவும் சபலத்தில்
உள்ள என் கட்சிக்காரர்களை போட்டு அமுக்கி வைப்பதற்கு . நன்றாக தாவக் கூடிய கங்காரு
எதிர் கட்சிக் காரர்களுக்கு என் கட்சிக்குத் தாவுவதற்கு பயிற்சி கொடுப்பதற்கு . ” சரிந்து
விழுந்த ஆஸ்திரேலிய பிரதமரை அவரது உதவியாளர் தாங்கிப் பிடித்துக் கொண்டார் .
-----------------------------------------------------------------------------------------------------------------------------
[ முகநூலில் பதிவு செய்தது . ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக