கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 28 [ நவம்பர்
16 - 30 , 2014 ] - இதழில்
வெளிவந்த எனது ஹைக்கூ கவிதைகள் .
தேசீய ஒருமைப் பாட்டு தினம்
மொழி வேறுதான்
இனம் வேறுதான்
மனம் ஒன்றுதானே ?
இனத்தை மறந்து விடு
மொழியைத் துறந்து விடு
உணர்வால் ஒன்று படு .
உயிரற்ற சாலைகள் கூட
இணைந்தேயிருக்கின்றன
மனிதர்களுக்குப் பாடமாய் .
கலைவாணர் பிறந்த தினம் .
கலைவானில் பறந்தார்
கருணையால் உயர்ந்தார்
மனதில் நிற்கிறார் என்.எஸ்.கே .
மறைந்தார் கலைவாணர்
மறையாத சிந்தனைகளால்
நிலைத்து நிற்கிறார் .
மாட்சுவோ பாஷோ நினைவு தினம் .
மூவடி படிமங்கள்
வெளிச்சமாய் இன்றும்
பாஷோ ஏற்றிய தீபங்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக