பிம்பம் .
கண்ணாடியில்
முகம் பார்க்காமலே
கழிந்து
போன காலம் நிறைய உண்டு .
வகிடெடுக்கும்
வழக்கம் இல்லாததால்
தலை
வாரவும் கண்ணாடி பார்த்ததில்லை .
அகத்தின்
அழகு தெரிந்து விடுமோவென்ற
அச்சத்தினாலும்
இருந்திருக்கலாம் .
முகமில்லை
அகமென்று
உணர்ந்த
பின்னும்
ஏனோ
கண்ணாடி பார்க்கத்
தோன்றவேயில்லை
.
எனினும்
முகம்
காணும் வேட்கையில்
கண்ணாடி
பார்க்கும் ஆசை
வந்த
போது
முகம்
தொலைந்து போயிருந்தது .
இப்போதோ
தெளிவான
நீரில் கூட
தொலைந்து
போன
முகம்
தேடும் மனம் .
[
புதுப்புனல் அக்டோபர் 2014 ]
தெளிந்த நீரோடையாய்
பதிலளிநீக்குமுகம் பார்க்கும் கண்ணாடியாய்
விழிகளில் தெளிவாய்...
எப்படி டி சாத்தியமானாய்...நீ