தொலைந்து
போனது .
இரண்டாயிரம்
சதுர அடி
தரைத்
தளமும் மாடியுமாய் .
நான்கு
புறமும் எட்டு செண்ட் வெற்றிடம் .
போர்ட்டிகோவில்
நடுத்தரக் கார் .
மூத்தவன்
மருத்துவன் .
இளையவன்
கணிணி மேதை .
இருவரும்
இருப்பதோ
இந்திய
எல்லைக்கப்பால் .
வீடு
துடைக்க , பாத்திரம் கழுவ
தனித்
தனியாக வேலையாட்கள் .
துணி
துவைக்கவும் , சமையல் செய்யவும்
விதம்
விதமான இயந்திரங்கள் .
தோட்டத்தை
சுத்தமாக்க
வந்து
போகும் தோட்டக்காரர் .
காவலுக்கு
விலையுயர்ந்த
கோபக்கார
நாய் .
இத்தனைக்கும்
நடுவில்
தொலைந்து
போய் விட்டது
பாதுகாத்து
வைத்திருந்த ,
“
காணி நிலம் “ கேட்ட பாரதியின்
கவிதைத்
தொகுப்பு .
[
புதுப்புனல் செப்டம்பர் 2014 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக