கணிப்பு .
அவர்கள்
இவர்களுக்குள் .
இவர்கள்
அவர்களுக்குள் .
தெரிந்தும்
தேடிக்
கொண்டேதான்
இருக்கிறார்கள் .
இவர்கள்
அவர்களையும் .
அவர்கள்
இவர்களையும் .
சுயமாக
அமைத்துக் கொண்ட
சுவர்களுக்குள்
ஒளிந்திருக்கும்
இருட்டில்
தேடுவதால்
இது வரை
அவர்களால்
இவர்களையும்
இவர்களால்
அவர்களையும்
கண்டு
கொள்ளவே இயல வில்லை .
எனினும்
தொடர்ந்து
கொண்டேதான்
இருக்கிறது
தேடல் .
சுவர்களில்
துளை போட்டு
உருவாகும்
வெளிச்சத்தில்
அவர்கள்
இவர்களையும்
இவர்கள்
அவர்களையும்
கண்டு
கொண்டு
ஒன்றாக
ஆகிப் போகலாம் ;
அல்லது
அவர்கள்
இவர்களாகவும்
இவர்கள்
அவர்களாகவும்
மாறியும்
போகலாம் .
எல்லாமே
ஒரு கணிப்புதான் .
[ மலைகள் இணைய இதழ் - 63 ஆவது இதழ் – டிசம்பர் 2 , 2014 ]
நன்றி : மலைகள் இணைய
இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக