சும்மா தமாசுக்கு.....- சொர்க்கமும்
நரகமும் .
ஒரு அமெரிக்க வழக்கறிஞர் , ஒரு ஜெர்மானிய விஞ்ஞானி , ஒரு ரஷ்ய தொழிற்சங்கத்
தலைவர் மூவரும் ஒரே நேரத்தில் மரணம் அடைந்தார்கள். மூவருமே ஒரே நேரத்தில் வானுலகம் போய்ச்
சேர்ந்தார்கள் . அங்கே இரு வாசல்கள் பக்கத்துப் பக்கத்தில் . ஒன்று
சொர்க்கத்திற்கானது . மற்றொன்று நரகத்திற்கான வாசல் . இரண்டுக்கும் நடுவில் ஒரு
தேவ தூதர் – கையில் ஒரு புத்தகத்தோடு .
மூவரும் போய்ச் சேர்ந்த நேரத்தில் அவர்களுக்கு முன்னால் பெரிய வரிசை .
இரண்டு வாசல்களுக்கும் ஒரே வரிசைதான் என்பதால் வரிசை மிக நீண்டிருந்தது . தேவதூதர்
தன் கையில் இருந்த புத்தகத்தை புரட்டி பார்த்துப் பார்த்து ஒவ்வொருவராக ஏதேனும்
ஒரு வாசலுக்குள் அனுப்பிக் கொண்டிருந்தார் . ஒரு வழியாக நம்மாள் மூவரும் தேவதூதன்
முன்னால் வந்து விட்டார்கள் .
“ எதை வைத்து வாசலை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் ? “ என்றார் அமெரிக்க
வழக்கறிஞர் .
“ ஒவ்வொருவர் செய்த பாவ புண்ணியங்களின் விபரங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது
. அதன் அடிப்படையில் சொர்க்கமும் , நரகமும் தீர்மானிக்கப் படுகிறது “ என்றார் தேவ
தூதர் .
”இல்லை , உங்களது செயல் பாரபட்சமாக இருப்பதாக நாங்கள்
கருதுகிறோம் . “ என்றார் ரஷ்யர் .
“ ஏன் அப்படி கருதுகிறீர்கள் ? “ தேவதூதர்
குழப்பத்துடன் கேட்டார் .
” காத்திருந்த
நேரத்தில் நான் சேகரித்த புள்ளி விபரப் படி
99.927 சதவிகித இந்தியர்களை நீங்கள் சொர்க்கத்திற்கு
அனுமதித்திருக்கிறீர்கள் . ஆனால் மற்ற நாட்டவர்களைப் பொறுத்தவரை அந்த சதவிகிதம்
மிக மிக கம்மியாக உள்ளது . உண்மையில் பார்க்கப் போனால் மற்ற எல்லா
நாட்டவர்களுக்கும் சேர்த்து அந்த சதவிகிதம் வெறும் 0.008 தான் “ என்றார் ஜெர்மானிய
விஞ்ஞானி .
“ இதை நாங்கள் பலமாக ஆட்சேபிக்கிறோம்
. ஒரு போராட்டம் நடத்தப் போகிறோம் . “ என்று குரலை உயர்த்தினார் ரஷ்யர் .
“ உங்களது செயல் பாரபட்சமானது . அதற்கான
சரியான காரணம் தெரியும் வரை நாங்கள் உள்ளே போக மாட்டோம் . “ அமெரிக்கர் விரலை
உயர்த்தி பேசினார் .
சற்று நேரம் திகைத்துப் போயிருந்த தேவதூதர்
மிக மெல்லிய குரலில் பதில் கூறினார் . “ அய்யா , நாங்கள் சொர்க்கத்திற்குள்
அனுமதிக்கும் அத்தனை இந்தியர்களும் அந்த நாட்டில் சாதாரணப் பிரஜைகளாக இருந்தவர்கள்
. பிறந்ததில் இருந்து இறக்கும் வரை நரக வாழ்க்கையே வாழ்ந்து விட்டார்கள் . பாவம் ,
இங்கு வந்தாவது சொர்க்க வாழ்வை அனுபவிக்கட்டுமே என்று தேவன் இந்த சலுகையை
வழங்கியுள்ளார் . அவ்வப்போது நரகத்திற்குள் அனுப்பப்படும் இந்தியர்கள் அந்த நாட்டு
அரசியல்வாதிகள் . “
தேவதூதனின் பதிலைக் கேட்ட மூவரும்
மறுபேச்சின்றி அவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்த வாசலுக்குள் நுழைந்து விட்டனர் .
----------------------------------------------------------------------- [ முகநூல் பதிவு ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக