கவிழாத படகுகள் .
இளம் வயதில் தோன்றிய
தனித் தீவுக்
கற்பனைகள்
இன்னும் மறக்கப் படாத
ரகசியங்களை
வழுக்கும் மேசையின்
இரு புறமும் அமர்ந்து
பறிமாறிக் கொண்ட
நேரத்தில் ,
இனிய காற்றிலும் ,
ஆற்று நீரில் பட்டுத்
தெளித்த
மழைத் துளிகளின்
அழகிலும்
மனம் ஒன்றி ,
படகு கவிழ்ந்த பயணம்
வாய்க்காமலே போய்
விட்ட
சோகத்தில்
ஆழ்ந்ததினால்
கவிழாத படகின் பயணம்
ரசிக்கப் படாமலே
கழிந்து போய் விட்ட
இளம் வெயில் காலம் .
[ மலைகள் இணைய இதழ் - 64 ஆவது இதழ் – டிசம்பர் 17 , 2014 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக