கவிச்சூரியன் ஐக்கூ மின்னிதழ் – 32 ல் வெளியான ஐக்கூ கவிதைகள் .
வான்கோ
தோட்டத்து மலர்கள்
வர்ணமிழந்தன
தூரிகைக்கு
தானம் கொடுத்து .
மழை அழித்தது
தெருவோர
ஓவியத்தை
வரைந்தவனின்
அன்றைய தினத்தையும் .
குடையைப் பழுது
பார்ப்பவர்
விரிக்காத
குடைகளுடன்
நனைகிறார்
வெயிலில் .
பூச்சிகளின்
ஆயுளை
நிர்ணயிக்கின்றது
பல்லி நாக்கின்
நீளம் .
போட்டி போட்டன
கடை பொம்மைகள்
பேத்திக்கு
பரிசாவதற்கு .
[ கவிச்சூரியன் ஐக்கூ மின்னிதழ் – 32 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக