சுமேரியர்களும் தமிழும்
… [ பகுதி 1 ]
விவசாய கலைச் சொற்கள் சுமேரியர் காலம் தொட்டு இக்காலம் வரை
கட்டுரை ஆக்கம் - ஆய்வு ஆர்வலர்கள் :
1 ] புருஷோத்தமன்
பெ - ( பெரியார்
மணியம்மை பல்கலை கழகம், ஓய்வு பெற்றவர் ),
ஆராய்ச்சி மாணவர் , நேஷனல் டெக்னிக்கல் டீச்சர்ஸ்
ரிசர்ச் இன்ஸ்டிடுயூட் , தரமணி , சென்னை . மற்றும்
2 ] சுரேஷ்
ஈ எஸ் எம் - சிவில் துறை , நேஷனல் டெக்னிக்கல்
டீச்சர்ஸ் ரிசர்ச்
இன்ஸ்டிடுயூட் , தரமணி , சென்னை .
ஆய்வுச் சுருக்கம் :
‘ துப்பு ” என்ற சொல் திருக்குறளிலும்
சுமேரிய மொழியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது .
இதன் தாக்கத்தினால்
நாம் முன்பே துப்பில்லம் பயிலகம்
அதன் தொடர்பான
கல்வி முறை ஆராய்ச்சியை மேற்கொண்டோம் .
அதன் தொடர்பாக
அதே ஆராய்ச்சி
முறையைக்கொண்டு விவசாய கலைச்சொற்கள்
பற்றியும் ஆராய முயன்றோம் .
அதன் விளைவே இந்த கட்டுரை ,
இதன் மூலம் நாம் காண்பது
சுமேரிய காலத்து சில விவசாய கலை சொற்கள் இன்றும்
நம் பழக்கத்தில் உள்ளது என்பதே . இக்கண்டுபிடிப்பு
மேற்கொண்டு இவ்வாராய்ச்சியை தொடரத் தூண்டுகிறது .
முன்னுரை :
நாம் அனைவரும் அறிந்த சினிமா வசனம் - “ மந்திரியே
மாதம் மும்மாரி
பெய்ததா ? ” . நாம் அவ்வளவாக
அறியாத ஒன்று - “ சுமேரியர் மூன்று முதல் நான்கு முறை பயிர்களுக்கு
நீர் பாய்ச்சினர்
என்பது . ( கெர்லிண்டெ 1983 ) . வள்ளுவர்
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார்
என்று புகழ்ந்தார் . நீர் இன்றி அமையாது என்று நீரின் பெருமையும்
உரைத்தார் . துப்பார்க்கு துப்பு என்ற பலப்பொருள்
தரக்கூடிய ஒருசொல் கிளவியையும்
கையாண்டார் .
சுமேரியப் புலவரும்
நீரின் ஆதாரத்தை
பெருக்குவது பற்றியும் , உழவர் பெருமையைக் கூறியும் , ஏர் கொழுவில் பிடிக்கும்
களிமண்ணை நீக்கும் நுணுக்கம்
பற்றியும் வினவினர் . துப்பு (dub) இல்லம் (e) பயிலகம்
(ba-a) என்று சீர் காவியமாக களிமண் (im) தட்டில் (da) கீரியும்
(ge) வடித்தும் சென்றுள்ளனர் . சுமேரியர் விவசாய முறை வார்த்தைகள்
இன்றும் நாம் பின்பற்றக்கூடியதாக
உள்ளது . விவசாய வேலையின்
போது ஏர் முன்பாக இனிய பாடல் பாடியதாகவும்
அது தொலை தூர நாடுகளுக்கு
சென்றதாகவும் அறிகிறோம் . ( புருஷோத்தமனும் சுரேஷீம் 2014) .
மற்றும்
லோகநாதன் சுமேரிய மொழி தமிழுக்கும் சமசுகிருத்திற்கும் பொதுவான
தாய் மொழி என்று கூறுவார் .
அவர் உதாரணத்திற்கு
கொடுக்கும் சுமேரிய எழுத்து
ஒலி வடிவமான
‘ dub ’ என்பது ‘ துப்பு ’ என்ற தமிழ் வார்த்தைதான் . இதை நாமும் பின் கூறப்படும்
வழி முறையில் எளிதாகக் காண முடியும் . அம்முறையைக் கொண்டு
இக்கட்டுரையில் சில விவசாயச் சொற்களை ஒப்பிட்டு
பார்க்கப் போகிறோம் .
வழி முறை :
நாங்கள்
( புருஷோத்தமனும் சுரேஷீம் 2014 ) காட்டியுள்ள
முறையே இங்கு கையாளப்போகிறோம் .
இது நிபுணர்
அல்லாதவரும் கையாளும் வகையில்
உள்ளது . இம்முறையை ஓர் உதாரணத்தின் மூலமாகவே
விவரிப்போம் . சுமேரிய மொழி அகராதி இணையதளத்தில்
உள்ளது ( ePSD ) அதில் உள்ள ஒரு வார்த்தையின்
ஒலி வடிவம் ‘ dub ’ என்பது . அதைத் தமிழில்
‘ துப் ’, ‘ தப் ’ என்பதாகக் கொள்ளலாம்,
ஆனால் இவ்வார்த்தைக்கு
கொடுக்கப்பட்டுள்ள பல பொருள்களை கவனிக்க
வேண்டும் .
அவை : தேடுதல் ,
சுற்றுதல் , திரும்புதல் , தட்டுப் பலகையில்
எழுதிய குறிப்பு
என பலவாக உள்ளன . மேற்கண்ட பொருளுடனும்
ஒலி அமைப்புடனும்
ஒத்துள்ள வார்த்தைகளை தமிழ் அகராதிகளில் மற்றும்
வழக்கில் உள்ள வார்த்தைகளுடன்
ஒப்பிட , சில முயற்சிகளின்
பிறகு நாம் வார்த்தைகளை தேர்வு செய்யலாம் . அவ்வாறாக
இணைய தளத்தில்
உள்ள தென் ஆசிய அகராதிகளின்
தொகுப்பிலிருந்து எடுத்துக்கொண்ட சொற்கள் : துப்பு - உமிழ்நீர், உளவறிதல் ,
ஆற்றலுள்ளவன் , வலி , அறிவு , சாமர்த்தியம் ,
முயற்சி , பெருமை , நன்மை , நுகர்ச்சி , நுகர்பொருள் ,
உணவு , நெய் , தூய்மை , பகை , ஆராய்ச்சி , உளவு , துரு மற்றும்
துப்பட்டா - மேலுக்கு அணியும்
விலையுயர்ந்த நல்லாடை என்பன . ஒலி அமைப்பும்
பொருளும் ஒரு சொல்லுக்காவது
ஒத்திருந்தால் அதை நாம் தேர்வு செய்துகொள்ளலாம் ,
அதுவே பல பொருள்களுக்கும் ஒத்து இருந்தால்
அந்த சொல் மிகவும் பொருந்தக்கூடிய
சொல்லாக இருப்பதுடன் அது கண்டுபிடிப்பின் நிச்சயத்தன்மையையும் வெகுவாகக் கூட்டுகிறது . அவ்வகையில்
‘ துப் ’ என்ற ஒலி கொண்ட வார்த்தை ‘ துப்பு ’
என்ற சொல்லுடன்
பல பொருளுடன் ஒத்து வருகிறது ,
அதன் நிச்சயத் தன்மையும்
அதிகமாகிறது , இதன் மூலம் சொற்களின் தோற்றம்
பற்றியும் சில விவரங்கள் அறியக்கூடும் . இம்முறையையே இங்கு நாம் விவசாய கலைச் சொற்களுக்கும்
எடுத்துக்கொள்ள போகிறோம் .
விவசாய கலைச் சொற்கள் :
எளிதாக கிடைக்கக் கூடிய சில சொற்களை எடுத்துக் கொள்ளப்
போகிறோம் . இங்கு முறையே சுமேரிய எழுத்து
ஒலி வடிவம் ,
தொடர்ந்து பொருள் ,
இன்றைய தமிழ் சொல் வடிவம் ,
அதன் இன்றைய பொருள் என அளித்துள்ளோம் .
Ka-a-DU
>> விவசாய பிரிவு >> காடு >>
வனம் , இடம் , வயற்காடு
mun-gazi
>> விவசாய விளை பொருள் >>
முன் கழி
>> மூங்கில் ,
முன் கழி
kalam, ka-na-ag
>> சுமேரியரின்
இடம் >> களம் ,
அடைக்கலம் , கானகம் >> விளை
களம்,
வாழ்விடம் ,
கானகம்
e - ri - a, e - ri >> கழி நிலம் >>
ஏரி , ஆறு >>
ஏரி , ஆறு , கழினி
a >>
தண்ணீர் , விந்து >> அப்பு ,
ஆறு , ஆ >>
ஆறு , நீர் , ஐம்பூதங்களில் ஒன்று
a-sur-ra >> ஆழத்தில் உள்ள நீர் >> ஆ
சுர ஊறும் >>
ஆழத்தில் சுரக்கும் நீர்
apin > >விதைக்கப்பயன்படும் ஏர் >> ஆ
பின்னல் >> நீர் பின்னுதல்
கலத்தல் , கலப்பை , விதை ஏர்
gud-ur-ra >> பின் வரும் ; ஏர் தொடர >>
குடு ஊர , கூட ஊர >>
குதிரை , கூடவே ஊர்ந்து
வரும் ஏர் மற்றும் எருது
sal-la >> கலப்பை உழவு பிரிவு >> சால்
ஆழ >> ஆழ
உழுத சால்
zu >>
உழவு கூலி , ஏர் , கொழு பட்டை கூர் >>
கொழு >> கொழு
engar, mu-un-ga-ar >> விவசாயி >> எண்ணுங்கர்
, முன் உண் >> காரர் ,
மண் காரர் >>
மணியக்காரர் , மண் உடையார்
ensik, u-mu-un-si >> விவசாயி , அரசன்
>> எண் சி , முன்சி
>> முன்சீப் ,
தலைமை , முதிர்ச்சீ
விளக்கம் :
மேற்கண்ட குறிப்பில் நாம் எடுத்துக்கொண்ட
சில சொற்கள்
நமக்கு உடன் தெளிவு அளிக்கின்றது .
சில வார்த்தைகள்
முன் பகுதிகளைக் கொண்டும் ,
சில பின் விகுதிகளைக் கொண்டும் , சில முழு வார்த்தைகளை
கூட்டியும் பார்க்கவேண்டியுள்ளது .
சில வார்த்தைகள்
நம்பிக்கை அளிக்காமலும் உள்ளன . இது எதனால் எனின் , சுமேரியர்
எழுதிய களிமண் தட்டு எழுத்துக்கள்
முதலில் நாம் ஆரம்ப பள்ளிகளில் படம் பார்த்து கதை சொல்லும் முறையிலேயே
படமாக எழதப்பட்டது ,
பின்பு சுருக்கி
எழுதும் முறையும் , எழுத்து
கூட்டி எழுதும்
முறையும் , கலந்து எழுதும்
முறையும் புழக்கத்தில் வந்துள்ளது ,
ஆதலின் அக்காலத்திலேயே
எழுதி திரும்பப் படிக்கும்
முறை கடினமாகவே
இருந்துள்ளது ( தட்டுத் தடுமாறி படித்தல்
என்ற வழக்குச் சொல்லையும்
கவனிக்க ) பின்காலத்தில் சுமேரியர் அழிவு பட்ட காலத்தில்
அல்லது இடம் பெயர்ந்த காலத்தில்
அக்காடியர் இதை துணை மொழியாக கொண்டு பயன்படுத்திய காரணத்தினாலும்
இவ்வெழுத்துக்களின் முழுப்பொருளும் முழு உச்சரிப்பும்
அறியப் படாமல் இருந்துள்ளது முன் ஆராய்ச்சி செய்த மொழி வல்லுனரும்
சுமேரிய மொழி பழக்கத்தில்
இல்லாமல் இறந்து விட்டதாகவே
கருதினர் (சுமேரியர் இணையதளம்
கருவூலங்கள் ETCSL ). ஆனால் லோகநாதன்
போன்றோர் சுமேரிய மொழி தமிழுக்கும் சமசுகிருதத்திற்கும் மற்ற ஏனைய இந்திய மொழிகளுக்கும்
ஒரு முன்னோடியான
மொழி என்று ஐம்பது வருடங்களுக்கு
முன்பே கூறியுள்ளார்
நாம் மேற்கண்ட
குறிப்புகளை காணும் போது லோகநாதன் கூற்று சரியே எனத் தெரிகிறது , இதை உறுதி படுத்த மேலும் மொழி ஆர்வலர்கள் இவ்வாராய்ச்சியை
தொடர வேண்டியதாகிறது .
அத்துடன் சுமெரிய ( ePSD முதலான ) அகராதிகளை
தமிழ் மொழி ஆர்வலர் பயன்படுத்தும்
வகையில் அமைக்க அவசியமும் ஆகிறது .
இறுதிச் சுருக்கம் :
சுமேரியர்
பயன்படுத்திய சில விவசாய கலைச்சொற்கள் இன்றும்
நம் தமிழ் மொழி பழக்கத்தில்
உள்ளன , இதை அறியும் போது நமக்கு வியப்பாக
உள்ளதுடன் , நாம் ஏன் அனைத்து சுமேரியர்
அகராதி சொற்களையும்
தமிழ் ஆர்வலர்
அனைவரும் பார்க்கக் கூடியதாகச் செய்யக் கூடாது என்ற ஏக்கமும் தோன்றுகிறது .
சுமேரிய மொழி அழிந்து
பட்டதாக ஆர்வலர் கூறினாலும்
அது தமிழ் மொழி உருவத்தில்
இன்றும் பழக்கத்தில் உள்ளது எனும்போது, ஊக்கமளிப்பதாக
உள்ளது .
பார்வைக்கு :
ePSD, பென்சில்வானியா
சுமேரியன் டிக்சஷனரி, http://psd.museum.upenn.edu/epsdi1/index.html
ETCSL
hyyps://www.sumerian.org/,http://etcsl.orinst.ox.ac.uk/,
கெர்லிண்டெ
மெனஎர் செயின்ட்
ஐல்கென், 1983, அக்ரிகல்சுர் ஆப் ஓல்ட் பாபிலோனியன்
பீரியட், JANES, Vol
– 15, 1983, g-63-78
சுமேரியர்
http://www.ancientscripts.com/sumerian.html
தென் ஆசியா அகராதி தொகுப்பு,
http://dsal, uchicago.edu/dictionaries/
புருஷோத்தமன்
பெ. சுரேஷ் ஈ.எஸ்.எம்.,2014, ரிப்லேக்டிங்
ஆன் பெடகாகிக்கல்
இச்சூஷ் ஆப் ஈ துப் பா ஆ
ஆப் சுமேரியா
டு அவர் பிரசெண்ட் டைம்ஸ், என் ஐ டி டி டி ஆர், போபால், வால் - 7, இஸ்சு
- 2, ஏப்ரில் மே 2014,
http://www.nitttrbhopal.org/journal/volume7/volume7issue2.pdf
லோகநாதன்
கே., சுமேரியன்
தமிழ்
https://sites.google.com.site/sumeriantamil/
-------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக