கேள்விகளும் பதில்களும் .
கேட்டிருந்திருக்கலாம்
அந்தக் கேள்விகளை
எதிர்ப்பட்ட யாரேனும் ஒருவரிடம் .
சொல்லியிருந்திருக்கலாம்
அந்தப் பதில்களை .
கேட்கப்படாத
கேள்விகளும்
அளிக்கப்படாத
பதில்களும்
சுற்றிச்சுற்றி
வருகின்றன மனதிற்குள் .
கேட்டுவிடலாம்
அல்லது சொல்லப்படலாம்
என்றேனும்
ஒருநாள் யாரேனும் ஒருவரிடம்
என்ற
அதீத நம்பிக்கைகளோடு .
[
தளம் ஜூலை – செப்டம்பர் 2015 ]
பதிலளிநீக்குமிக சரி பல கேள்விகள் கேட்கப்படாமலும் அதற்கு பதில் அளிக்கப்படாமலும் சுற்றி சுற்றி வருகின்றன
அருமை சார்.
பதிலளிநீக்கு