வாழப் பழகிக் கொள்கிறோம் .
துளி இரத்தம் உறிஞ்சும்
சிறு கொசுக்களை
புகைபோட்டு விரட்டி விடுகிறோம்
அல்லது
காற்றில் கலக்கும்
வேதியியல் காரணி வழி
கலைத்து விடுகிறோம்
அல்லது
மட்டையால் மடக்கிப்
பிடித்தெரித்து விடுகிறோம்
சமயங்களில்
விடாது துரத்தி
வெறுங்கையாலேயே
நசுக்கி விடுகிறோம்
எனினும் மொத்த வாழ்வையும்
உறிஞ்சிக் கொண்டிருக்கும்
எத்தனையோ
விஷப் பூச்சிகளை
ஏதும் பண்ண இயலா
கையாலாகாத் தனத்தோடு
வாழப் பழகிக் கொள்கிறோம் .
[ புதுப்புனல் ஜீன்
2015 ]
அருமை அய்யா! அத்தனையும் உண்மை! சிறுஉயிர்கள் எதிர்த்துதாக்காது? பெருஉயிர்கள் ....?நன்றி
பதிலளிநீக்குநிஜம் தான்.
பதிலளிநீக்குஅருமை சார்.
கொசுக்கடியைத் தாங்கிக் கொண்டு தூங்கப் பழகிவிட்டால் கொசு கடிக்க விட்டால் தூக்கம் வராது!
பதிலளிநீக்குஅருமை ஐயா சவுக்கடி வார்த்தைகள் இதற்க்கான காரணவாதிகளில் நானும் ஒருவனே...
பதிலளிநீக்குதேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி