காணாமல் போகலாம் .
நேற்றைய கவிதையை
தேடியலைகையில்
எதிர்ப்பட்டது
இன்றைய கவிதை .
அகப்பட்ட கவிதையை
கட்டுடைத்துப் பார்க்கையில்
எஞ்சியது
கொஞ்சம் வார்த்தைகளே
என்றுணர்ந்த கணத்தில்தான்
தோன்றியது
காணாமல் போகலாம்
நாளையக் கவிதையுமென்று .
[ புதுப்புனல் ஜீன்
2015 ]
வணக்கம் அய்யா! அருமையான கவிதை! பதிவர் சந்திப்பில் பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் அய்யா!!
பதிலளிநீக்குமிக மிக அருமை
பதிலளிநீக்குஇந்த அதிருப்தியே
அடுத்த கவிதைக்கான விதை
வாழ்த்துக்களுடன்...
அருமை சார்.
பதிலளிநீக்கு