ஒப்பனை செய்யும் மாயம் .
1950 களில் தென்னிந்திய சினிமா தொழில்
நுட்பக் கலைஞர்கள் சங்கம் [ Cine Technicians’ Association of South India – CTA ]
என்றொரு சங்கம் இருந்திருக்கிறது . [ இப்போதும் இருக்கிறதோ ? ] அதன் உறுப்பினர்களுக்காக என்று ஒரு இதழும் வெளியாகிக் கொண்டிருந்திருக்கிறது
. Journal of The Cine Technicians’ Association of South India . 46 பக்கங்கள் – விலை
1 ரூபாய் .
1956 ஜனவரி இதழில் ஒப்பனைக் கலைஞர்
ஹரிபாபு குறித்த ஒரு சிறு கட்டுரையில் [ அல்லது தகவல் ] ஒரு படம் அவர் எஸ் . வி . ரங்காராவுக்கு
ஒப்பனை செய்வது போல உள்ளது . இணைத்துள்ள பிரதியை வாசித்தவர்களில் யாரோ ரங்காராவை அடித்து
முக்காலா கிருஷ்ணமூர்த்தி என்று எழுதியுள்ளார்கள் . கீழேயே ஒப்பனை முடிந்தபின் என்று
இரு படங்கள் உள்ளன . ஒன்று எஸ் . வி . ரங்காராவ் இன்னொன்று முக்காலா கிருஷ்ணமூர்த்தி
. எது சரி என்பதை முகஜாடை வைத்து கண்டு பிடிக்க முடியவில்லை என்றாலும் படங்களில் தென்படும்
மாற்றம் ஹரிபாபுவின் தொழில் திறமைக்குச் சான்றாகவே உள்ளது . இன்னொரு தகவல் . அதுவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி
ஆகிக் கொண்டிருந்த பொய்த் தலைமுடியை [ Wig ] இங்கேயே தயாரித்தது ஹரிபாபுதானாம் .
செப்டம்பர் , அக்டோபர் 1956 இதழில்
ஒரு பக்கத்தில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலில் T . ஜானகிராம் என்றொரு
பெயர் உள்ளது . அநேகமாக எழுத்தாளர் தி . ஜானகிராமனாகத்தான் இருக்க வேண்டும் . இன்னொரு
சுவாரசியமான பெயர் – ரஜனிகாந் . ஆனால் அவர் இயக்குநர் ரஜனிகாந்தாம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக